முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவம் - கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல்: பிலிப்பைன்சில் 4 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

பிலிப்பைன்ஸ் நாட்டில் இடதுசாரி கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் நடந்த சண்டையில் ஒரு ராணுவ வீரர் உள்பட 4 பேர் பலியாகினர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் நீக்ரோஸ் ஆக்சிடெண்டல் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், புதிய மக்கள் ராணுவ படையைச் சேர்ந்த 20 பேருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் மோதல் ஏற்பட்டது. அரை மணி நேரத்திற்கும் நடைபெற்ற இந்த சண்டையில் புரட்சிப்படையை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.  ராணுவத்தினர் தரப்பில், ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார் மற்றும் 2 வீரர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் கிளர்ச்சியாளர்களிடமிருந்து இருந்து பல்வேறு வகையான உயர்ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மக்கள் ராணுவ படை என்பது பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு ஆயுதக் குழுவாகும். 1980-ம் ஆண்டு முதல் அவர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. இருப்பினும் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தது. 1960 முதல் இந்த அமைப்பினர் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து