முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் நீலகிரியில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் பார்வையிட்டார்

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

நீலகிரி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் பார்வையிட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்தும்,வீடுகளுக்கும் வெள்ளம் புகுந்தும் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிக மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் நேற்று வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஊட்டிக்கு வருகை புரிந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி., உதயகுமார் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உட்பட உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அதன் பின்னர் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எம். பாலாடா பகுதியில் மழையினால் அடித்துச் செல்லப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டார். தொடர்ந்து காந்தல் ஓம்பிரகாஷ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.

அதை தொடர்ந்து கூடலூர் வட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள தொரப்பள்ளி பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்,  பேரிடர் மேலாண்மை இயக்குநர் ஜெகநாதன், மாவட்ட கலெக்டர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, காவல் கண்காணிப்பாளர் கலைச் செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ஏ.ராமு, முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன், முன்னாள் எம்.பி., கே.ஆர். அர்ஜூணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து