முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: ஹாங்காங்கில் குழந்தைகளுடன் பொதுமக்கள் பங்கேற்ற பேரணி

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

ஹாங்காங் : ஹாங்காங்கில் ஜனநாயாக போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தங்களையும் இணைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கில் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்தது. இந்த புதிய சட்டத்தின் மூலம், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கப்படுவார்கள். ஆனால், சட்டத் திருத்த மசோதா அறிமுகப்படுத்துவதற்கு முன்பிருந்தே, கடந்த மூன்று மாதங்களாக எதிர்ப்பு உருவானது. ஹாங்காங் எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். சமீபத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

நேற்று காலை ஜனநாயக போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக நடைபெற்ற குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் கலந்து கொண்ட பேரணி மிகவும் அமைதியாக நடந்தது. பலூன்களும் மற்றும் குழந்தைகளை ஏற்றி வரும் தள்ளுவண்டிகளும் நிறைந்து ஏதோ விழாக்கோலம் போல வண்ணமயமாக பேரணி காட்சியளித்தது. மிகவும் அமைதியான முறையில் இந்தப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் டி பார் டிமான்ஸ்டிரேஷன், ஏ பார் ஆர்ப்பாட்டம், பி பார் புரொட்டெஸ்ட் என்று குறிப்பிடப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும். அவர்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து