முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து சீனாவுடன் வர்த்தகம் குறித்து பேச்சு நடத்தி வருகிறோம்: அதிபர் டிரம்ப்

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : வர்த்தகம் குறித்து தொடர்ந்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தற்போது ஒப்பந்தத்துக்குத் தயாராக இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நியூயார்க்கில் பேசும் போது, சீனாவுடன் நாங்கள் நல்ல நட்புறவில் இருக்கிறோம். தொடர்ந்து சீனாவுடன் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது அவர்களுடன் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நிலையில் நாங்கள் இல்லை. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் சீனாவுடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

மேலும், இந்தச் சந்திப்பில் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன இறக்குமதிப் பொருட்கள் மீது 10 சதவீத கட்டணங்களை விதிக்கத் திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து