முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் தொடரும் கனமழை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் தற்போது அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் பேசுகையில், மீட்புப்பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. நிவாரணப்பணிகளை செயல்படுத்துவதே அரசின் தலையாய கடமையாகும். எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் நிலைமையை நினைத்து கவலை கொள்ள தேவையில்லை. மத்திய அரசும் நிலைமையை கவனித்து வருகிறது என தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலத்தில் மழை வெள்ளத்திற்கு இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் உதவித்தொகை வழக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்திருந்தார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.  அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் துங்கபத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தவாங்கரே மாவட்டத்தின் பெரும்பாலான முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரனஹள்ளியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தக்சினா மாவட்டத்தின் பெரும்பகுதிகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டது. பின்பு பாதுகாப்பு படையினர் அவரது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். கடந்த 6 மணி நேரத்தில் மீட்புப்படையினரும் , தன்னார்வலர்களும் படகுகள் மூலம் 270 நபர்கள் மற்றும் 43 கால்நடைகளை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து