முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய காங். தலைவர் தேர்வில் பங்கேற்காத சோனியா, ராகுல்

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : காங்கிரஸ் புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அவர்கள் இருவரும் ஆலோசனையில் கலந்து கொள்ளாமல் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு புறப்பட்டு சென்றனர். 

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 400 தொகுதிகளில் படு தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து மே மாதம் 25-ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்தார். தனக்கு பதில் புதிய தலைவரை தேர்வு செய்து கொள்ளும்படி அறிவித்தார். அது மட்டுமல்லாது மூத்த தலைவர்களின் சமரச முயற்சியும் பலனில்லாமல் போனது. பிரியங்காவை புதிய தலைவராக்க முயற்சி நடந்த போதும் அதையும் ராகுல் தடுத்து நிறுத்தினார். இதனால் கடந்த 77 நாட்களாக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி இல்லாமல் தள்ளாடியபடி உள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் 65 பேர் மற்றும் மாநில தலைவர்கள், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் சோனியா காந்தி, ராகுல் பங்கேற்கவில்லை. அவர்கள் இருவரும் ஆலோசனையில் கலந்து கொள்ளாமல் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு புறப்பட்டு சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து