முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி - பியர் கிரில்ஸ் புகழாரம்

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

புது டெல்லி : சுற்றுச்சூழல் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டவர் என்று பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.

டிஸ்கவரி ஆங்கில டி.வி. சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு என்ற  பிரபல நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு இருப்பதோடு, பியர் கிரில்சுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

அந்த வகையில் பியர் கிரில்சும், பிரதமர் மோடியும் பங்கு கொள்ளும் மேன் வெர்சஸ் வைல்டு சிறப்பு நிகழ்ச்சி இந்தியாவில் உள்ள ஜிம் கோர்பட் தேசிய பூங்காவில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்ச்சி டிஸ்கவரி மற்றும் அதன் குழும சேனல்களில் வருகிற 12-ம் தேதி ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி கலந்து கொண்ட மேன் வெர்சஸ் வைல்ட் குறித்து பியர் கிரில்ஸ் மீண்டும் பேசியுள்ளார். இந்தியாவின் நீண்டகால ரசிகன் நான். சுற்றுச் சூழலை பாதுகாக்க வலியுறுத்தவே பிரதமர் மோடி, ஒபாமாவை சாகச பயணம் அழைத்துச் சென்றேன். சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் ஆழ்ந்த அக்கறை இருந்ததால் மோடி என்னுடன் சாகச பயணம் செய்தார் . ஒரு இளைஞரைப் போன்று காட்டில் மோடி நேரத்தை செலவிட்டது எனக்கு வியப்பாக இருந்தது. மழையில் நனைந்த போதும், ஆற்றில் தார்ப்பாய் படகில் சென்ற போதும் புன்னகையுடன் இயல்பாக இருந்தார் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து