முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை: குஜராத்தில் சர்தார் சரோவர் அணை முதன்முறையாக திறப்பு

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : குஜராத்தில் கனமழை காரணமாக சர்தார் சரோவர் அணை முதன்முறையாக திறக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் மாநிலத்தில் நர்மதை அணையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது சர்தார் சரோவர் அணை. கடந்த 1961-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் நேரு, நர்மதை நதியில் சர்தார் சரோவர் அணை கட்ட அனுமதி அளித்தார். 1979-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. 1987-ல் அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. அணை திட்டத்தால் பழங்குடிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி நர்மதா நதி பாதுகாப்பு அமைப்பு (நர்மதா பச்சாவோ அந்தோலன்) சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 2000-ம் ஆண்டு அக்டோபரில் சில கட்டுப்பாடுகளை விதித்து தடை உத்தரவை நீக்கியது. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது அணை கட்டுமானப் பணிகள் வேகப்படுத்தப்பட்டு. அவர் பிரதமரான பிறகு 2017-ம் ஆண்டு அணை முழுமையாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் பெரும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் குஜராத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. கட்டப்பட்டதில் இருந்து சர்தார் சரோவர் அணை முதன்முறையாக முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. 139 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையில் 131 மீட்டர் அளவுக்கு மட்டுமே தண்ணீர் சேமிக்க அனுமதி உள்ளது. தண்ணீர் வரத்து அபாய அளவை எட்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையைத் திறக்க முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அணையின் 30 ஷட்டர்களில் 26 ஷட்டர்கள் திறந்து விடப்பட்டுள்ளன. சர்தார் சரோவர் அணை பகுதியில் தான் சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து