முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் வெள்ள பாதிப்பு: இன்று பார்வையிடுகிறார் ராகுல்

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பார்வையிடுகிறார்.

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் வடக்கு மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், கண்ணூர், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக 24 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.08 லட்சம் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர், வனத் துறையினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழை காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழைக்கு இதுவரை 42 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் இந்த மழை மேலும் 5 நாட்களுக்கு தொடரும் என்றும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மீனவர்களுக்கு கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று பார்வையிடுகிறார். இந்த தகவலை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து