வளைகுடா நாடுகளில் பக்ரீத் கொண்டாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      உலகம்
bakrid-festival 2019 08 11

குவைத் : சவுதி, கத்தார், குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் நேற்று 11-ம் தேதி தியாக திருநாள் எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனையோட்டி நேற்று காலை பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் இந்த தொழுகையில் பங்கேற்றனர். மேலும் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் கீழக்கரையை சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து நல்வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், புஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா ஆகிய இடங்களில் பெருநாள் கொண்டாடப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றினர். காலை முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி அலைமோதத் தொடங்கினர். தக்பீர் ஒலி முழங்க அதிகாலை தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது. இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் தழுவி தியாகத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து