தேர்தலை நடத்தக் கோரி போராட்டம்: மாஸ்கோவில் திரண்ட 50 ஆயிரம் பேர்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      உலகம்
moscow struggle 2019 08 11

மாஸ்கோ : மாஸ்கோவில் தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 50,000 பேராக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோ நகர உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி, அவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் தடை விதித்தனர்.  இந்த முடிவை திரும்ப பெற கோரியும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரியும் கடந்த 21-ம் தேதி சுமார் 22,000 பேர் வீதிகளில் இறங்கி கோரிக்கை விடுத்தனர். இதில், எதிர்கட்சியினர் உட்பட, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 1,400 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடிமக்கள் மற்றும் பிரபலங்களின் ஆதரவு நாடு முழுவதும் வளர்ந்து வருவதால், புரோஸ்பெக்ட் சாகரோவில் நடக்கும் அங்கீகரிக்கப்பட்ட போராட்டத்தில் இதுவரை குறைந்தது 50,000 பேர் கூடியிருப்பதாக வெள்ளை எதிர் கூட்டத்தைக் கண்காணிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது .மேலும், மாஸ்கோ நகர அரசு இசை நிகழ்ச்சிகளை தடைசெய்தும், இந்த பேரணியில் பிரபலமான பாடகர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சனிக்கிழமையன்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, முகமூடி அணிந்த காவல்துறையினர், எதிர்க்கட்சி ஆர்வலர் லியுபோவ் சோபோலின் அலுவலகத்திற்கு சென்று அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக சோபோல் தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது:- என்னால் போராட்டதிற்கு வர இயலாது. ஆனால் நான் இல்லாமல் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். ரஷ்யா சுதந்திரமாக இருக்கும் என கூறினார் சோபோல். இதுவரை மாஸ்கோ ஆர்ப்பாட்டத்தில் 8 பேர் கைது செய்யபட்டுள்ளதாக போலீஸ் கண்காணிப்பு வலைத்தளம் தெரிவித்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து