பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் விடுதலை

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      உலகம்
Panama s ex-president freed 2019 08 11

பனாமா சிட்டி : ஊழல் வழக்கில் சிக்கிய பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் மார்ட்டினெல் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி கோர்ட் அதிபரை விடுதலை செய்தது.

மத்திய அமெரிக்க நாடு பனாமா. இந்த நாட்டில் 2009-2014 ஆண்டுகளில் அதிபராக இருந்தவர் மார்ட்டினெல். 67 வயதான இவர் பதவியில் இருந்தபோது, போட்டி அரசியல்வாதிகளை அச்சுறுத்துவதற்காக தனியார் உரையாடல்களை பதிவு செய்வதற்கு அரசு நிதியை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், 150 அரசியல்வாதிகள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை உளவு பார்த்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த வழக்கு பொய் வழக்கு, நான் எந்த குற்றமும் செய்யவில்லை என மார்ட்டினெல் திட்டவட்டமாக மறுத்தார். இருப்பினும் மார்ட்டினெல்லை கைது செய்து விசாரணை நடத்த பனாமா சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் புளோரிடாவில் கோரல் கேப்லஸ் என்ற இடத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்த போது அவர் கைது செய்து, பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

அதன் பின்னர் பனாமா நாட்டில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு விசாரணையில் மார்ட்டினெல் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி கோர்ட்டு விடுதலை செய்து உள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து