முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுமுறை: மத்திய அரசு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ராணுவத்தில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுமுறையாக 5 நாட்கள் விடுப்பு வழங்கப்படும் என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய பணியாளர் நலத்துறை, பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குழந்தை பராமரிப்பு விடுமுறை இனி தனியாக வசிக்கும் ஆண் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என விதிகளில் திருத்தம் செய்தது. இந்த விதிகள் ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் பொருந்தும் என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 40 சதவீதம் வரை மாற்றுத்திறனுடன் 22 வயது வரை உள்ள குழந்தைகளை பராமரிக்க பெண்களுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு வழங்கப்பட்டது. இனி 40 சதவீதம் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை (வயது வரம்பில்லாமல்) பராமரிக்க பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி தனியாக வசிக்கும் ஆண் ஊழியர்களுக்கும் 5 நாட்கள் விடுப்பு வழங்கப்படும் என ராணுவ அமைச்சக அதிகாரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து