முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 15 நாள்களில் முழு அமைதி திரும்பும் - மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் இன்னும் 10, 15 நாள்களில் முழுமையாக அமைதி திரும்பி விடும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி நம்பிக்கை தெரிவித்தார்.

ஐதராபாதில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:-

ஜம்மு - காஷ்மீரில் சட்டம், ஒழுங்கு நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ராணுவம், துணை ராணுவப் படை வீரர்களை ஈடுபடுத்தி, சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

ஆனால், அண்டை நாடான பாகிஸ்தான் அரசும், அங்குள்ள அரசியல் தலைவர்களும், ஜம்மு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பொறுப்பற்ற வகையிலும், கோபமூட்டும் வகையிலும் பேசி வருகின்றனர்.  ஜம்மு, காஷ்மீரின் சில இடங்களில் வெள்ளிக்கிழமை 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டு விட்டது. சில கல்வி நிறுவனங்கள் நேற்று முன்தினம் முதல் செயல்படத் தொடங்கி விட்டன. இன்னும் 10, 15 நாள்களில் ஜம்மு, காஷமீரில் முழுமையாக அமைதி திரும்பி விடும். ஜம்மு, காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு 30, 40 நாள்கள் அமலில் இருந்த காலமெல்லாம் உண்டு. அந்த நிலைமை இப்போது இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து