முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி அனுப்பும் வாரணாசி பெண்கள்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

வாரணாசி : முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக்கிய பிரதமர் மோடி தங்களுடைய சகோதரர்கள் என பாராட்டும் வாரணாசி பெண்கள் அவருக்கு ராக்கியை அனுப்பி வருகின்றனர்.

முத்தலாக் நடைமுறையை தடை செய்து முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் மத்திய அரசு மசோதா இயற்றியது. நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கியது. பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். தடையை மீறி முஸ்லிம் ஆண் ஒருவர், முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால், அவர் 3 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியது நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த நகர்வை இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் பலர் பாராட்டினர். இந்நிலையில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பெண்கள், பிரதமர் மோடியை எங்களுடைய மூத்த சகோதரர் என அழைத்துள்ளனர். அது மட்டமல்லாது, அவருக்கு ராக்கியை அனுப்பி வருகின்றனர். ராக்கியை தயார் செய்யும் ஹுமா பானோ கூறுகையில், பிரதமர் மோடி முத்தலாக்கை கிரிமினல் குற்றமாக்கியுள்ளார். இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி மூத்த சகோதரர் போன்றவர். அவருக்காக நாங்கள் ராக்கியை தயாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து