முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஷஸ் தொடர்: ஸ்மித்துக்கு ஜாப்ரா ஆர்சர் சவாலாக இருப்பார்- வார்னே

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லார்ட்ஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்மித்திற்கு அறிமுகமாகும் ஜாப்ரா ஆர்சர் கடும் சவாலாக இருப்பார் என வார்னே தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் லார்ட்ஸில் வருகிற 14-ந்தேதி தொடங்கும் ஆஷஸ் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியில் புயல் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர் அறிமுக வீரராக விளையாட உள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே கூறுகையில், ‘‘ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதலாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசினார். அவர் ஒவ்வொரு இன்னிங்சிலும் சதம் அடிப்பதை பார்க்க விரும்புகிறேன்.

ஆனால் 2-வது டெஸ்டில் ஆட இருக்கும் ஜாப்ரா ஆர்சர், ஸ்மித்துக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்வார் என்று நம்புகிறேன். அவரது வருகை எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம்’’ என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து