கிறிஸ் கெய்லின் கோரிக்கையை நிராகரித்தது வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
SPORTS-5 2019 08 11

Source: provided

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட விருப்பம் என்ற கிறிஸ் கெய்லின் கோரிக்கையை நிராகரித்தது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு. வெஸ்ட் இண்டீஸ்க்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது.

ஒரு நாள் தொடர் முடிவடைந்ததும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 22-ந்தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது.இந்த டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

உலகக்கோப்பை போட்டியின்போது தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆசைப்படுவதாக அதிரடி மன்னன் 39 வயதான கிறிஸ் கெய்ல் கூறியிருந்தார்.ஆனால் அவர் டெஸ்ட் போட்டி விளையாடி 4 ஆண்டுகள் ஆகி விட்டது.

அவரது கோரிக்கையை தேர்வு குழுவினர் நிராகரித்து விட்டனர்.வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி வருமாறு:-ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிரேக் பிராத்வைட், டேரன் பிராவோ, ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்ப்பெல், ராஸ்டன் சேஸ், ரஹீம் கார்ன்வால், ஷேன் டவ்ரிச், கேப்ரியல், ஹெட்மையர், ஷாய் ஹோப், கீமோ பால், கேமர் ரோச்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து