முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளம் வயதில் இரட்டை சதம்: கவுதம் காம்பீர் சாதனையை முறியடித்தார் ஷுப்மான் கில்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணியின் வீரர் ஷுப்மான் கில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் அதிகாரப்பூர்வமற்ற -3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா ‘ஏ’ அணி 201 ரன்களும், வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி 194 ரன்களும் எடுத்தன. 8 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த தடுமாரிய நிலையில் ஷுப்மான் கில், ஹனுமா விஹாரி கூட்டணி அணியை சரிவில் இருந்தது.

அபாரமாக விளையாடிய 19 வயதான ஷுப்மான் கில் 247 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசினார். அதேவேளையில் ஹனுமான் விகாரி 185 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். இந்தியா ஏ அணி 90 ஓவர்களில் 365 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அப்போது ஷுப்மான் கில் 204, ஹனுமா விஹாரி 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தனர்.

இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் இந்திய கிரிக்கெட்டில் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷுப்மான் கில். இதற்கு முன்னர் கடந்த 2002-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 வயதில் கவுதம் காம்பீர் 218 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து