மாநிலங்களவையில் மாற்றங்களை கொண்டு வரும் துணை ஜனாதிபதி: வெங்கையாவுக்கு ஓ.பி.எஸ். பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      தமிழகம்
O Panneer Selvam 2019 03 31

சென்னை : மாநிலங்களவையில் அறிவார்ந்த பெருமக்கள் பாராட்டத்தக்க வகையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் என்று துணைஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்தார். 

சென்னையில் நடைபெற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறித்த நில் கவனி முன்னேறு என்று புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மாநிலங்களவைத் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலங்களவையில் நடைமுறைகளில் அறிவார்ந்த பெருமக்கள் பாராட்டத்தக்க வகையில் பல்வேறு சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும், துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து , அனைத்து பகுதிகளுக்கும் இடைவிடாத பயணம் மேற்கொண்டு, மாணவர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், ஆன்மீகத் தலைவர்கள் என பலதரப்பட்ட மக்களையும் நேரில் சந்திந்து கலந்துரையாடி, தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இத்தகைய அரிய தகவல்களைத் தொகுத்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சிறப்பான புத்தகமாக வடிவமைத்து, பல்வேறு தரப்பட்ட மக்களும் படித்து பயன் பெறத்தக்க வகையில் வெளியிட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரிய அம்சமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து