தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு - சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்படுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Salem Corporation 2019 08 11

சென்னை : தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சிக்கு முதல்வர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதை வரும் 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

தமிழக அரசின் 2012-14-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கை தொடர்பாக கூட்டத் தொடரின் போது போது சிறப்பாக செயல்படும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தமிழக முதல்வரின் விருது வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அறிவித்தார். இதனை செயல்படுத்தும் வகையில் நகராட்சித்துறை 55 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியது. இதன்படி தற்போது தமிழக அரசின் முதல்வர் விருதிற்கு சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 25 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இதேபோல தமிழகத்தின் சிறந்த நகராட்சியாக தர்மபுரி நகராட்சி தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தை பிடித்துள்ளது அந்த நகராட்சிக்கு 15 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடத்தை பிடித்த வேதாரண்யம் நகராட்சிக்கு 10 லட்சம் ரூபாய், மூன்றாம் இடத்தை பிடித்த அறந்தாங்கி நகராட்சிக்கு 5 லட்ச ரூபாய் பரிசு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான பரிசு தொகையை வரும் 15-ம் தேதி சுதந்திர தினவிழாவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து