சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டணம் அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      தமிழகம்
CBSC Exam 2019 08 11

புது டெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் 50 ரூபாயிலிருந்து ரூ.1,200 ஆகவும், பொதுப் பிரிவினருக்கு ரூ.750-லிருந்து ரூ.1500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும் போதே பதிவு செய்ய வேண்டும், அதே போல 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 11-ம் வகுப்பிலேயே பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்ட தேர்வுக் கட்டண விவரங்களை சி.பி.எஸ்.இ. அறிவித்தது. ஏற்கனவே சி.பி.எஸ்.இ பள்ளிகள் பழைய கட்டணங்கள் மூலம் பதிவுகளை தொடங்கிவிட்ட நிலையில், இப்போது புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணத்துக்குரிய வித்தியாசத்தை மாணவர்களிடம் இருந்து இனிமேல் பள்ளிகள் வசூலிக்கும்.

சி.பி.எஸ்.இ. வாரியத்தின் திருத்தப்பட்ட தேர்வுக்கட்டணத்தின்படி, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் இனிமேல் 5 பாடங்களுக்கு ரூ.1,200 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு முன் அவர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தினர். ஏறக்குறைய 24 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினர் இதற்கு முன் ரூ.750 கட்டணம் செலுத்திய நிலையில் இனிமேல் ரூ.1500 கட்டணம் 5 பாடங்களுக்கு செலுத்த வேண்டும். இந்த கட்டணம் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

12-ம் வகுப்பு எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் 5 பாடங்கள் தவிர கூடுதல் பாடத்துக்கு கட்டணம் ஏதும் இதற்கு முன் செலுத்த தேவையில்லை. ஆனால் இனிமேல் ஒவ்வொரு கூடுதல் பாடத்துக்கும் ரூ. 300 கட்டணமும், பொதுப்பிரிவினர் இதற்கு முன் கூடுதல் பாடத்துக்கு ரூ.150 செலுத்திய நிலையில் அவர்கள் ரூ. 300 செலுத்த வேண்டும்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், சி.பி.எஸ்.இ. பள்ளியில் படிக்கும் பார்வை சவால் உடையவர்கள் 100 சதவீதம் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பழைய கட்டணத்தின்படி தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் மீதமுள்ள வித்தியாசத் தொகையை கடைசித் தேதிக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் பெயர் பதிவு செய்யப்படாது. 2019-20-ம் ஆண்டு தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், மைக்ரேஷன் கட்டணமும் ரூ.150லிருந்து ரூ. 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

10-ம் வகுப்பு, மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களைக் கொண்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இதற்கு முன் 5 பாடங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது இது இனி ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 12-ம் வகுப்புக்கு கூடுதல் பாடத்துக்கு ரூ. ஆயிரம் வசூலித்த நிலையில் இனி ரூ. 2 ஆயிரம் வசூலிக்கப்படும்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து