மேற்கூரை விரிசலால் விமான நிலையத்திற்குள் பெய்த மழை - லண்டனில் பயணிகள் அதிர்ச்சி

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      உலகம்
London airport Cracking the rain 2019 08 12

லண்டன் : லண்டனில் விமான நிலையத்தின் மேற்கூரையில் இருந்து மழை கொட்டி தீர்த்ததால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

 லண்டனில் உள்ள லூடான் விமான நிலையத்தில் திடீரென பயணிகள் சற்றும் எதிர்பாராத விதமாக மேற்கூரையில் இருந்து மழை கொட்டி தீர்த்தது. அங்கு 15 நிமிடங்களுக்கும் மேலாக மேற்கூரையில் விரிசல் விழுந்து மழை வரவே அங்கு தண்ணீர் தேங்கி சிறிய குளம் போல காட்சியளித்துள்ளது. இதனால் விமான நிலையத்துக்குள் இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ தொடங்கியது. இச்சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதில் ஒருவர், உலகிலேயே மிக மோசமான விமான நிலையம் இதுதான் எனவும், மற்றொருவர், இது மிகவும் மோசமான நிகழ்வு. பராமரிப்பு சரியாக இல்லை எனவும் கமெண்ட் அடித்திருந்தனர். இதையடுத்து லூடான் விமான நிலையம், பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டது. அதில், எங்கள் சேவையில் சிறிய தடங்கள் ஏற்பட்டது. இந்த நிகழ்வுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எதிர்பாராமல் இப்படி ஆகிவிட்டது. இதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து