முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவநிலை மாற்ற விழிப்புணர்வு பணியில் தென் ஆப்பிரிக்க பள்ளி மாணவர்கள்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

கேப்டவுன் : தென் ஆப்பிரிக்காவில் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் வீரர்களாக நியமிக்கப்பட்டு பருவநிலை மாற்றம் தொடர்பான சமூகப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச இளைஞர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இளைஞர்களை நெறிப்படுத்தி ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தி சிறந்த எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதும், அவர்களுக்கு ஊக்கம் அளித்து கவுரவிப்பதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். இந்த தினத்தையொட்டி ஐ.நா. அமைப்பானது இளைஞர்கள் மூலம் பருவநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள பள்ளிகள், ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யு.என்.டி.பி) ஆதரவுடன், பொது மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மாணவர்களை சுற்றுச் சூழல் - வீரர்கள் என நியமித்து சமூகப் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றன. இதற்காக அவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகின்றன. மாணவர்கள், குப்பைகளை சுத்தம் செய்யும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு, தங்கள் பள்ளிகளைச் சுற்றியுள்ள 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக கொட்டப்படும் குப்பைகளை அகற்றியுள்ளனர். மேலும் சில மாணவர்கள் விவசாய கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்தி, பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் சுற்றுச்சூழலின் மாசுபாடுகள் இருக்கும் நிலையில் நிலைத்த விவசாயத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என கற்றுக் கொள்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து