பக்ரீத் தொழுகைக்கு பின் காஷ்மீரில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      இந்தியா
kashmir 144 ban 2019 08 12

ஸ்ரீநகர் : காஷ்மீரில் தொழுகைக்கு வந்தவர்கள் சில இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றதால் பக்ரீத் தொழுகைக்கு பிறகு மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பக்ரீத் பண்டிகையையொட்டி அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று தடை உத்தரவு தளர்த்தப்பட்டு இருந்தது. இதனால் கடைகள் திறந்திருந்தன. மார்க்கெட்டுகளும் இயங்கின. ஏ.டி.எம்.களும் திறந்திருந்தன. அந்த நேரத்திலும் சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தது. ஸ்ரீநகரில் பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பக்ரீத் தொழுகைக்காக காலையில் தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. அப்போது அருகில் உள்ள மசூதிகளுக்கு மட்டும் சென்று தொழுகை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

அதே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. குறுகிய அளவிலேயே கூட்டம் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது சம்பந்தமாக பாதுகாப்பு படையினர் வாகனங்களில் ஒலிபெருக்கியில் அறிவிப்புகளை வெளியிட்டு சென்றனர். வழக்கமாக பக்ரீத் தொழுகை நடைபெறும் பல மசூதிகளில் நேற்று தொழுகைக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும், தொழுகைக்கு வந்தவர்களும், சில இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். கல்வீச்சு சம்பவமும் நடந்தது. இதனால் பக்ரீத் தொழுகைக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

டெலிபோன் மற்றும் இணையதள வசதிகள் தொடர்ந்து 7 நாட்களாக முடக்கப்பட்டுள்ளன. பக்ரீத் பண்டிகையையொட்டி அவை செயல்பட அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கலவரம் வெடிக்கலாம் என கருதுவதால் செயல்பாட்டுக்கு அனுமதிக்கவில்லை. இதற்கிடையே வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதற்கும், முக்கிய தகவல்களை கூறுவதற்கும் போலீஸ் துறையே 300 இடங்களில் பொது டெலிபோன் வசதியை ஏற்படுத்தி இருந்தது. அதன் மூலம் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

2600 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை தொழில் நகரமாக இருந்தது - முன்னாள் தொல்லியல் ஆய்வாளர் சோ. சாந்தலிங்கம்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து