முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூகத்தில் அமைதி அதிகரிக்கட்டும் - பிரதமர் மோடி தியாக திருநாள் வாழ்த்து

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பக்ரீத் பண்டிகையானது சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை தமிழில் தியாகத் திருநாள் என்றும், அரபியில் ஈத் அல்-அதா என்றும் அழைக்கின்றனர்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மசூதிகள் மற்றும் பல்வேறு மைதானங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், பக்ரீத் பண்டிகையானது சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். ஈத் முபாரக் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து