17-ம் தேதி அத்திவரதர் சிலை குளத்தில் வைக்கப்படும்: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      தமிழகம்
athivarathar Rose colored silk 2019 08 03

சென்னை : 17-ம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதர் சிலை குளத்தில் வைக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரும் 16-ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடிகிறது. 17-ம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதர் சிலை குளத்தில் வைக்கப்படும். வந்தவாசி திருவண்ணாமலையில் இருந்து வரும் பக்தர்கள் டி.ஏ.வி பள்ளி அருகே தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 80 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். அத்திவரதரை தரிசனம் செய்த பக்தர்கள் அளித்த காணிக்கை மூலமாக ரூ.5 கோடி கிடைத்துள்ளது.

பக்தர்கள் வரும் வழிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கார் பார்க்கிங் பகுதி அருகே பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை முதல் இரவு வரை அன்னதானம், கழிவறை, குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் அத்திவரதர் கோவில் பாதுகாப்பு பணியில் குளறுபடி இருந்ததால் கோபப்பட்டுவிட்டேன். காவல்துறையினரை பற்றி தவறாக பேசியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பும் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அத்தி வரதர் தரிசிக்க வரும் பக்தர்களிடம் அனுமதி சீட்டு பெற்ற பிறகு தரிசிக்க அனுப்ப வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கூறியும் சிலர் இதை கடைபிடிப்பது இல்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் காவல்துறை உட்பட பலரை கண்டித்தார். இதனால் சில காவலர்கள் உட்பட பலர் சமூக வலைத்தளங்களில் ஆட்சியரை பற்றி விமர்சனம் எழுப்பினர். பணிகள் சரியாக நடக்க வேண்டும் என்பதால் சில விஷயங்களில் கண்டிக்கக் கூடிய சூழல் உள்ளது. இது தொடர்பாக மீம்ஸ்களை பரப்ப வேண்டாம் உணர்வுப் பூர்வமாகப் பேசப்பட்ட வார்த்தைகளை பெரிதுப்படுத்த வேண்டாம் எனவும், எனது பேச்சு தனிப்பட்ட நபருக்கு எதிரானது கிடையாது.

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களை தங்க வைத்து அனுப்புவதற்காக கீழம்பி, பி.ஏ.வி. பள்ளி அருகேயும், பச்சையப்பன் பள்ளி மைதானத்திலும் இளைப்பாறும் கூடங்கள் அமைத்துள்ளோம். அங்கிருந்து தமிழக முதல்வர் உத்தரவு படி 25 மினி பேருந்துகள் இயக்கப்படும். காவலர்கள் எண்ணிக்கை 12,500 ஆக உயர்த்தப்படும் என்று கலெக்டர் பொன்னையா, போலீஸ் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியின்போது தெரிவித்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து