அத்திவரதரை தரிசனம் செய்ய கூடுதலாக 90 மினி பேருந்துகள் இயக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      தமிழகம்
tn government 2019 06 22

சென்னை : காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க கூடுதலாக 90 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் சுவாமிகளை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு ஏதுவாக, தற்காலிகமாக ஓரிகை, முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில், ஓளிமுகமது பேட்டை மற்றும் வரதராஜபெருமாள் கோவில் அருகாமையில் உள்ள ரங்கசாமி குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களை போக்குவரத்துத்துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கிருந்த பயணிகளுடன் கலந்துரையாடி குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வின்போது விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த, போக்குவரத்துத்துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்.,

அத்திவரதரை தரிசிக்க வரும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவ்வப்பொழுது தொடர்புடைய உயர்மட்ட அலுவலர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன் அடிப்படையில், மிகவும் அபூர்வமாக 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திவரதர் தரிசனம் காண வருகை தரும் பொதுமக்களுக்கு ஏதுவாக, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகாமையிலுள்ள திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவதால், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், நாள்தோறும் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை, தாம்பரம், ஆற்காடு, திருவள்ளூர் பூவிருந்தவல்லி, திருவண்ணாமலை, வந்தவாசி, திண்டிவனம், செய்யாறு, திருப்பதி, திருத்தணி, வேலூர், செங்கல்பட்டு மற்றும் ஆரணி ஆகிய 14 இடங்களுக்கு நாள்தோறும் 861 நடைகள் இயக்கப்படுகின்றன. மேலும், கடந்த 1-ம் தேதி முதல் 265 நடைகள் கூடுதலாகவும், 6-ம் தேதி முதல் 87 கூடுதலாகவும், ஆகமொத்தம் நாள்தோறும் 1,213 நடைகள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 70,000 நபர்கள் வந்து செல்கின்றனர்.

தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்க ஏதுவாக, நாள்தோறும் 70 சிறிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 5 பேருந்து நிலையங்கள் மற்றும் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்தையும் இணைக்கின்ற வகையில் 20 சிறிய பேருந்துகள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் போதிய பணியாளர்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகளை அத்திவரதர் தரிசனம் நிறைவடையும் வரையில் இந்த வசதிகளை தொடர்ந்து பராமரிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து