காஷ்மீர் நிலவரம் குறித்து வைரலாகும் போலி வீடியோ

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      இந்தியா
kashmir fake video 2019 08 13

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்துள்ள சூழலில் பீதியை கிளப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், காஷ்மீரின் குல்காம் பகுதியில் எடுக்கப்பட்ட கோர வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் வீடியோவில் வெடிகுண்டு தாக்குதலில் பலத்த காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

மேலும் இந்த வீடியோவில் இந்திய ராணுவம் காஷ்மீர் மக்களை கொல்வதாக தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை டுவிட்டரில் பலர் பகிர்ந்து வருகின்றனர். வீடியோவினை பாகிஸ்தானை சேர்ந்தவர்களும் பகிர்ந்து வருவது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைகிறது. வைரல் வீடியோவின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வீடியோவில் இருந்து ஸ்கிரீன்ஷாட்களை இணையத்தில் தேடிய போது தற்சமயம் வைரலாகும் வீடியோ கடந்த ஆண்டு அக்டோபரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. பின் இந்த சம்பவம் தொடர்பாக அக்டோபர் 2018-க்கு பின் வெளியிடப்பட்ட பல்வேறு செய்திகள் இணையத்தில் கிடைக்கப் பெற்றன. அவற்றில், காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஜெய்ஷ் இ மொகம்மது அமைப்பை சேர்ந்த மூவர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோவுடன் பகிரப்படும் தலைப்பும் உண்மையில்லை என உறுதியாகியுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து