முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் கனமழை பெய்யும்: கேரள வானிலை மையம் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மகராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் பேரிழப்புகளை அந்த மாநிலங்கள் சந்தித்து வருகின்றன. குறிப்பாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, கேரளாவில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மலப்புரம், வயநாடு, கொச்சி, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கனமழை காரணமாக வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்களுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது. 40 பேர் காணாமல் போயுள்ளனர். 2.52 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் பினராய் விஜயன் நேற்று மழை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில் தெற்கு கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் சந்தோஷ் கூறியதாவது:

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கேரளாவின் பல பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எர்ணாகுளம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும். கோழிக்கோடு உள்ளட்ட வட மாவட்டங்களில் நாளை(இன்று) கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களில் 20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொல்லம், பத்தினம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து