முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பிற்பகல் நிலவரப்படி ஒரு பவுன் ரூ. 29016 -க்கு விற்கப்படுகிறது.

உலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா - சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. இது போலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை அண்மையில் உயர்ந்து வருகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கணிசமாக உயர்ந்த நிலையில், நேற்று மேலும் உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி (ஆக.13) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ. 28896-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 3612.00-க்கு விற்பனையானது.

நேற்று மாலை நிலவரப்படி ஒரு பவன் தங்கம் விலை மேலும் 120 ரூபாய் அதிகரித்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் 29,016 ரூபாய்க்கு விற்பனையானது.  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 3,627-க்கு விற்பனையானது. இதனால் தங்கத்தின் விலை நேற்று ஒட்டுமொத்தமாக கிராமுக்கு 24 ரூபாயும், பவுனுக்கு 192 ரூபாயும் அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 49 ரூபாயாக விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து