டெல்லியில் சுஷ்மா சுவராஜுக்கு இரங்கல் கூட்டம்: பிரதமர் மோடி - அமித்ஷா பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      இந்தியா
Sushma Swaraj condolence meeti pm modi-amit shah participate 2019 08 13

புதுடெல்லி : மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்றனர்

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67), கடந்த 6-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும்,நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து