நிலவின் சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது சந்திரயான் - 2

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      இந்தியா
Chandrayaan - 2 2019 08 14

பெங்களூர் : நிலவின் தென் பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

சந்திரயான் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக அதிநவீன வசதிகளுடன் ரூ. 604 கோடியில் சந்திரயான் -2 விண்கலம் உருவாக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் 22-ம் தேதி மதியம் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2 இதுவரை பூமியின் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வந்தது. இந்நிலையில் அது நேற்று அதிகாலை அதன் பாதையிலிருந்து உயர்த்தப்பட்டு நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நிறுத்தப்பட்டது. அதாவது டிரான்ஸ் லூனார் இன்ஜெக்‌ஷன் எனப்படும் சந்திரயான் -2 விண்கலத்தின் இறுதி சுற்றுப்பாதை உயர்த்தும் பணி நேற்று 14-ம் தேதி காலை 2:21 மணிக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து இதனை கண்காணித்தனர். சரியான முறையில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் வரும் செப்டம்பர் 8-ம் தேதி திட்டமிட்டபடி சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து