நான் எப்போது காஷ்மீர் வர வேண்டும்? டுவிட்டரில் ராகுல் காந்தி பதிவு

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      இந்தியா
Rahul Gandhi 2019 05 02

புது டெல்லி : காஷ்மீர் கவர்னரின் அழைப்பை ஏற்று காஷ்மீர் வருவதாக கூறிய நிலையில் மீண்டும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி டுவிட் செய்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த 10-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தியின் பேச்சுக்கு காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் பதிலளித்தார்.  அவர் கூறுகையில், ராகுல் காந்தியை காஷ்மீருக்கு வந்து பார்வையிடுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். ஜம்மு -காஷ்மீர் அரசுக்க்கு சொந்தமான விமானத்தை டெல்லிக்கு அனுப்புகிறோம். அதில் பயணித்து காஷ்மீருக்கு வாருங்கள். இங்கு நிலைமை மிகவும் சீராகத்தான் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்வீர்கள் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, நானும் எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவும் உங்களின் (கவர்னர்) அழைப்பை ஏற்று ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை பார்வையிட வருகிறோம்.  இதற்காக நீங்கள் எங்களுக்கு விமானம் அனுப்ப வேண்டியதில்லை. ஆனால், அங்கு சுதந்திரமாக பயணம் செய்து மக்களையும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களையும் நமது ராணுவ வீரர்களையும் நாங்கள் சந்திப்பதை நீங்கள் உறுதிப்படுத்தினால் போதும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் ராகுல் காந்தி, அன்பிற்குரிய மாலிக் அவர்களே, என் டுவிட்ட்ற்கு உங்கள் பலவீனமான பதிலை கண்டேன்.  எவ்வித கட்டுப்பாடும் இன்றி நான் காஷ்மீர் வந்து, அங்குள்ள மக்களை சந்திக்கிறேன் என கூறி விட்டேன். எப்போது நான் வர வேண்டும்? என கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து