முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 அலகாக பதிவு

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 5.4 அலகாக பதிவாகியுள்ளது.

ஜப்பானில் கடந்த மாதம் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு வாரத்தில் மட்டும் 5 முறை சராசரியாக 5.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  அதே போல் கடந்த ஜூன் மாதத்தில் 55 முறையும், கடந்த வருடத்தில் மட்டும் 742 முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜப்பான் நாட்டின் டோஹோகு பகுதியில் உள்ள ஆமோரி நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 5.4 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் 90 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து