முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரீன்லாந்து பனித் தீவை வாங்க விரும்பும் டிரம்ப்

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

டென்மார்க் நாட்டிடமிருந்து கிரீன்லாந்து பனித்தீவை வாங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க உள்ளூர் பத்திரிக்கைகளில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கிடையே 8 லட்சத்து 11 ஆயிரம் சதுர மைல்கள் அளவிலான பரப்பை உள்ளடக்கியது கிரீன்லாந்து. முற்றிலும் பனிப்பிரதேசமான இந்த தீவு டென்மார்க்கின் ஒரு தன்னாட்சி பிரதேசமாகும். அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் அலுவல் ரீதியாக டென்மார்க் செல்ல உள்ளார். இந்நிலையில் அவர் கிரீன்லாந்து தீவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான விமான தளம் ஒன்று கிரீன்லாந்து தீவில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. நாட்டின் முக்கிய ரேடார் மையமாக இருக்கும் இந்த தளத்தில் 600 வீரர்கள் உள்ளனர். மேலும் டென்மார்க் அதன் சுயராஜ்ய பிரதேசங்களுக்கு நிதி ஆதாரங்களை பெற முயற்சித்து வருவதாக கடந்த ஆண்டு டிரம்ப் கூறியிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே போன்று 1946-ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த ஹாரி ட்ரூமன் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கிரீன்லாந்து தீவை வாங்க முற்பட்டார். ஆனால் அவரது அந்த பேச்சுவார்த்தை நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து