பனாமா நகரம் தோன்றி 500 ஆண்டுகள் நிறைவு: பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019      உலகம்
Panama City 2019 08 16

வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள முதல் ஸ்பானிஷ் குடியேற்றமான பனாமா நகரம் தோன்றி 500 ஆண்டுகள் ஆனதையொட்டி பிரம்மாண்ட கேக் வெட்டி அங்குள்ள மக்கள் கொண்டாடினர்.

வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள முதல் ஸ்பானிஷ் குடியேற்றமான பனாமா நகரத்தின் 500-வது ஆண்டு நிறைவை 4,500 பேர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த கேக் 3.63 மீட்டர் (11.9 அடி) நீளமும், 2.5 மீட்டர் உயரமும் மற்றும் கிட்டத்தட்ட 2 மீட்டர் அகலமும் கொண்டது. 2,200 கிலோ மாவு பயன்படுத்தப்பட்ட இந்த கேக்கை, சுமார் 100 பேர் தயாரித்தனர். இது நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான பழைய பனாமாவின் யுனெஸ்கோ பகுதியில் கொண்டாடப்பட்டதுஎன கூறப்படுகிறது.

1519-ம் ஆண்டு பனாமா நகரம் நிறுவப்பட்டது. தொல்பொருள் பெருமை வாய்ந்த பழைய பனாமா நகரத்தில் இடிபாடுகளுக்கு மத்தியில் நடந்த பிரமாண்டமான விழாவில் பனமேனிய கலைஞர் அன்னி டோவர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடலை பாடினார். இந்த விழாவில் அணிவகுப்பும் இடம்பெற்றது. இதில் முன்னாள் உலக சாம்பியன் குத்துச்சண்டை வீரர் ராபர்டோ டுரான் தலைமை தாங்கி நடத்திய சுமார் 100 இசைக் குழுக்கள் பங்கேற்றன. இதில் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் நடிகர்களும் என பலர் கலந்து கொண்டனர்.

அரியாஸ் டாவிலா ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி, 1519 -ல் பனாமா நகரத்தை நிறுவினார். மேலும், பனாமாவிலிருந்தே பிராந்தியமெங்கும் குடியிருப்புகள் பரவின. 1671-ம் ஆண்டில் புகழ்பெற்ற ஆங்கில கொள்ளையர் ஹென்றி மோர்கனால் பனாமா நகரம் அழிக்கப்பட்டது. பின் உள்ளூர் அதிகாரிகளால் தென்மேற்கில் 10 கி.மீ தொலைவில் மீண்டும் கட்டப்பட்டது. இப்போது அது பழைய நகரம் என்று அழைக்கப்படுகிறது, இது ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா தளமாக உள்ளது.

இப்போது​​பனாமா நகரம் லத்தீன் அமெரிக்கன் மியாமி என்று அழைக்கப்படும் ஒரு நிதி மையமாக திகழ்கிறது. மேலும் பனாமாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 1.5 மில்லியன் மக்கள், கிட்டத்தட்ட 40 சதவிகிதம் மெட்ரோ பகுதியில் வாழ்கின்றனர். இதில் பரபரப்பான சர்வதேச விமான நிலையம் மற்றும் பனாமா கால்வாயின் நுழைவு இருப்பதன் மூலம் உலக வர்த்தகத்தில் 6 சதவீதம் பங்களிப்பை இது செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து