முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேல் ரத்னா விருதுக்கு பஜ்ரங் பூனியா பெயர் பரிந்துரை

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : விளையாட்டுத் துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு, பஜ்ரங் பூனியாவின் பெயரை தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்த சாதனைகளை படைக்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு மத்திய அரசால் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேரி கோம், பாய்சங் பூட்டியா உள்ளிட்ட 12 பேர் கொண்ட தேர்வுக்குழு, பூனியாவின் பெயரை இறுதி செய்து விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதேபோல் அர்ஜூனா மற்றும் துரோணாச்சாரியா விருதுகளுக்கான பெயர்களும் இறுதி செய்யப்பட உள்ளது. கேல் ரத்னா விருதுக்கு மற்றொரு வீரரையும் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யலாம் என கூறப்படுகிறது. தற்போது ஜார்ஜியாவில் பயிற்சி மேற்கொண்டு வரும் பஜ்ரங் பூனியா, தனது பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டதை கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த விருதுக்கு தகுதியான சாதனைகளை தான் எட்டியிருப்பதாக அவர் கூறினார். மேலும், தகுதியானவர்களுக்கே விருதுகள் சென்று சேர வேண்டும் என தான் எப்போதும் சொல்வதாகவும் அவர் கூறினார். ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து