10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள் விராட் கோலி புதிய சாதனை

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
virat kohli 2019 06 12

Source: provided

போர்ட் ஆப் ஸ்பெயின் : 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்னை தொட்ட முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவர் 2010 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் 371 போட்டிகளில் 20 ஆயிரத்து 18 ரன் குவித்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் (3 ஆட்டம்) இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து இரண்டு சதம் அடித்து அசத்தினர். 2-வது போட்டியில் 120 ரன்னும், 3-வது போட்டியில் 114 ரன்னும் எடுத்தார். இதன் மூலம் விராட் கோலி புதிய சாதனை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர்) 10 ஆண்டு காலத்தில் 20 ஆயிரத்துக்கு மேல் ரன் குவித்து உள்ளார்.

10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்னை தொட்ட முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். விராட் கோலி 2010 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் 371 போட்டிகளில் 20 ஆயிரத்து 18 ரன் குவித்து உள்ளார். இதில் 67 சதங்கள் அடங்கும். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 18,962 ரன்களுடன் (2000- 2009-ம் ஆண்டு) உள்ளார்.வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக கோலி 9-வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தெண்டுல்கர் 9 சதம் அடித்து உள்ளார்.

வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து 3 சதம் அடித்த முதல் வீரர், 4 சதம் அடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். மேலும் கேப்டனாக ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் உள்ளார். அவர் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 7 சதம் (14 இன்னிங்சை) அடித்து உள்ளார். 2-வது இடத்தில் 5 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் (நியூசிலாந்துக்கு எதிராக 34 இன்னிங்ஸ்) உள்ளார்.ஒருநாள் போட்டியில் கேப்டனாக 21-வது (76 இன்னிங்ஸ்) சதத்தை பூர்த்தி உள்ளார். இதில் ரிக்கி பாண்டிங் 22 சதங்களுடன் (220 இன்னிங்ஸ்) முதல் இடத்தில் உள்ளார்.ரன்னை சேசிங் செய்தபோது அதிக சதம் அடித்த வரும் கோலிதான். அவர் 26 சதங்கள் அடித்து உள்ளார். அடுத்த இடங்களில் தெண்டுல்கர் (17 சதங்கள்) ரோகித் சர்மா (13 சதம்) உள்ளனர்.சேசிங்கின் போது கோலி அடித்த சதங்களில் (26) 22 ஆட்டத்தில் இந்தியா வென்று உள்ளது. அடுத்த இடத்தில் தெண்டுல்கர் (14 ஆட்டம்) உள்ளார்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து