முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வின் வெற்றியை தி.மு.க. கைகட்டி வேடிக்கைதான் பார்க்கும் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

சிவகாசி : தேர்தல் களத்தில் அ.தி.மு.க., தி.மு.க. தான் போட்டியிடும். அதில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். அதை தி.மு.க. கைகட்டி வேடிக்கைதான் பார்க்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தம் கிராமத்தில் குடி மராமத்து பணிகள் மூலமாக கண்மாய்களை தூர் வாரும் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது,

அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் மூலமாக புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்காகதான் முதல்வர் லண்டன் செல்கிறார். ஸ்டாலினுக்கு எங்களை குறை கூறுவது தான் வேலை. மத்திய அரசின் அனுமதியோடு மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்காக தான் வெற்றிகரமான பயணங்களை முதல்வர் மேற்கொள்ளவிருக்கின்றார். எடப்பாடியாரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும். நல்லவர்கள் யார் ஆதரவு கொடுத்தாலும் அ.தி.மு.க. ஏற்றுக் கொள்ளும். பா.ஜ.க.வோடு நல்ல உறவில் உள்ள இயக்கம் அ.தி.மு.க.தான். தேசியத்தின் பார்வையில் பா.ஜ.க. எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அ.தி.மு.க.வை கவர்ந்துள்ளது. தி.மு.க. பிரிவினையை தூண்டக்கூடிய கட்சி. தமிழக முதல்வர் எடப்பாடி யார் தேசியத்தையும் தெய்வீகத்தையும் மதிக்க கூடியவர். அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு சிறு எறும்புக் கூட இடையூறு இருக்காது. தி.மு.க. தீவிரவாதத்திற்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கிறது. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது நல்ல திட்டமாக இருந்தால் எந்த அரசியல் தலைவர்கள் சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம். அதில் எங்களுக்கு இந்த ஒரு மாறுபட்ட வேறுபட்ட கருத்தும் இல்லை. அ.ம.மு.க.வில் போட்டியிடுவதற்கு வேட்பாளா்கள் இல்லை. அந்த கட்சியில் இருந்தவர்கள் அனைவரும் எங்களிடம் வந்து விட்டார்கள். தேர்தல் களத்தில் அ.தி.மு.க., தி.மு.க. தான் போட்டியிடும். அதில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். அதை தி.மு.க. கைகட்டி வேடிக்கைதான் பார்க்கும். இவ்வாறு அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து