முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரியும், மாளிகைபுரம் மேல்சாந்தி பதவிக்கு பரமேஸ்வரன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆவணி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்தார். நேற்று காலை 5 மணிக்கு கோவிலில் நிர்மால்ய தரிசனம் நடந்தது. ஆவணி மாத பூஜைகளுக்கு பிறகு வருகிற 21-ம் தேதி நடை அடைக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலின் இப்போதைய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரியின் பதவிக்காலம் ஐப்பசி மாதத்துடன் முடிகிறது. இது போல மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தியின் பதவிக் காலமும் முடிகிறது. இந்த இரு கோவில்களின் புதிய மேல்சாந்தி தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு முதல் மேல்சாந்தி தேர்வு ஆவணி மாதமே நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆவணி மாதம் இன்று தொடங்க உள்ள நிலையில் நேற்று காலை 8 மணிக்கு சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோவில்களின் புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 பேரின் பெயர்கள் தனித்தனி சீட்டில் எழுதப்பட்டு வெள்ளிக்குடத்தில் போடப்பட்டது. பந்தளம் ராஜகுடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் வெள்ளிக்குடத்தில் இருந்து ஒரு சீட்டை எடுத்தனர். சபரிமலை கோவில் மேல்சாந்திக்கான சீட்டை ஆண் குழந்தையும், மாளிகைபுரம் மேல்சாந்திக்கான சீட்டை பெண் குழந்தையும் எடுத்தனர். சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி பதவிக்கு சுதிர்நம்பூதிரியின் பெயர் தேர்வு ஆனது. இவர், திரூர் பகுதியைச் சேர்ந்தவர். திருநாவ்யா நவமுகந்தன் கோவிலில் பணியாற்றியவர். மாளிகைபுரம் மேல்சாந்தி பதவிக்கு பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இவர், ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர்கள் ஆவணி மாதம் முழுவதும் கோவிலில் தங்கி இருந்து ஏற்கனவே பதவி வகிக்கும் மேல்சாந்தியிடம் இருந்து கோவில் வழிபாடுகள், பூஜை முறைகள் குறித்து பயிற்சி எடுப்பார்கள். கார்த்திகை மாதம் மண்டல கால பூஜைக்கு நடை திறக்கும் போது இவர்கள் மேல்சாந்தி பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து