முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை - கர்நாடக காங். தலைவர் டி.கே. சிவக்குமார் பேட்டி

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் டி.கே.சிவக்குமாரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி எனக்கு வேண்டாம். தற்போது தலைவராக உள்ளவருக்கு நான் ஒத்துழைப்பு வழங்குவேன். நான் எம்.எல்.ஏ.வாக உள்ளேன். மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். நான் கட்சியில் மூத்த தலைவர் அல்ல. இளம் தலைவராகவே உள்ளேன். கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணியை மேலிட தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள். எங்கள் கட்சியின் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களால் ஏழை மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். பழைய திட்டங்களை ரத்து செய்யக் கூடாது. தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் கூறுகிறார்கள். குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை. ஆனால் ஊடகங்களுக்கு இது எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. முதல்வர் எடியூரப்பா இது குறித்து எந்த விசாரணையை வேண்டுமானாலும் நடத்தட்டும். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

தொலைபேசி ஒட்டுகேட்பு புகார் குறித்து விசாரணை நடைபெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அதே கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே. சிவக்குமார், குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் குமாரசாமிக்கு அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து