முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பூடான் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

திம்பு : பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பூடான் பிரதமர் லோதே ஷெரிங் முன்னிலையில் இந்தியா - பூடான் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பூடான் பிரதமரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பூடான் சென்றடைந்தார். பிரதமர் மோடி அந்நாட்டுக்கு செல்வது இது இரண்டாவது முறையாகும். அங்கு அவருக்கு அந்நாட்டு அரசின் சிவப்பு கம்பள மரியாதையுடன் கூடிய உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்த இந்தியர்கள் ஆரவாரத்துடன் பிரதமர் மோடியை வரவேற்றனர். இதனையடுத்து பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், மன்னர் ஜிக்மி கேஷஷர் நம்கியால் வாங்சக் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் முன்னிலையில் இந்தியா - பூடான் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங்குடனான சந்திப்புக்கு பின் பிரதமர் மோடி பேசியதாவது:-

பூடானின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா பெருமை கொள்கிறது. 130 கோடி இந்தியர்களின் இதயத்தில் சிறப்பிடத்தை பூடான் பெற்றுள்ளது. அண்டை நாடுகளின் உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கடந்த 2014-ல் முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி பூடானுக்குத் தான் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டது நினைவுகூறத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து