முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்க.தேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம் .

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

டாக்கா : வங்காளதேச கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரசல் டொமிங்கோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்

இங்கிலாந்தில் கடந்த மே 30 -ல் தொடங்கி ஜூலை 14 வரை உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 9 போட்டிகளில் விளையாடிய வங்காளதேச அணி 3 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் ஆட்டத்திலேயே வெளியேறியது. இதையடுத்து, வங்காளதேச அணியின் பயிற்சியாளராக இருந்த ஸ்டீவ் ஹோடிஸ் உடனான ஒப்பந்தத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது.

இந்நிலையில், வங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ (44), நியமக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் வரும் 21-ம் தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு வங்காளதேச அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டொமிங்கோ அந்நாட்டின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டார். 2014-ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து அந்நாட்டு அணி டி-20 உலகக்கோப்பைகளில் அரையிறுதி வரை முன்னேற முக்கிய பங்காற்றினார். மேலும், 2015-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி சுற்று வரை முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து