முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாடிப்பட்டி பேரூராட்சி 7-வது வார்டு செயலாளர் சதீஸ்வரன் மறைவுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் இரங்கல்

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 7-வது வார்டு செயலாளர் சதீஸ்வரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 7-வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் பி.சதீஸ்வரன் உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். அன்பு சகோதரர் சதீஸ்வரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து