முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

திருச்சி : காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த அணை திறப்பு விழாவில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், துரைக்கண்ணு, வளர்மதி, ஓ.எஸ். மணியன் மற்றும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கல்லணை திறப்பு மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் அணை திறக்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பின. இதனால், காவிரி உபரி நீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்தேக்க அளவு 120 அடியாகும். அணையில், தற்போது 112 அடியைக் கடந்து நீர் நிரம்பியுள்ளது.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி காவிரி டெல்டா பகுதியில் ஒருபோக சம்பா சாகுபடிக்காகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக கல்லணையை வந்தடைந்துள்ளது. இந்நிலையில், கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் ஒரு போக சம்பா சாகுபடிக்காக தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டுள்ளது. கல்லணையில் உள்ள காவிரியில் 1000 கன அடியும், வெண்ணாற்றில் 1000 கன அடியும், கல்லணைக் கால்வாயில் 500 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 1000 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து