முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் அமைச்சர்

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : அமெரிக்கா - ரஷ்யா உறவு மேம்படுத்தப்படுவதற்கு முன்பு, பிரான்ஸ் - ரஷ்யா இடையிலான நட்புறவை மேம்படுத்துவது அவசியம் என பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹியுபெர்ட் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடனான நட்புறவு குறித்து பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்  ஹியுபெர்ட் வெட்ரின் பேட்டி அளித்தார். அப்போது, ரஷ்யா உடனான நட்புறவை நாம் உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். ஒரு வேளை டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானால் ஐரோப்பிய நாடுகளின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் ரஷ்யா உடனான உறவை பலப்படுத்த உத்வேகம் காண்பிப்பார். எனவே, அமெரிக்கா - ரஷ்யா உறவு மேம்படுத்தப்படுவதற்கு முன்பு, பிரான்ஸ் - ரஷ்யா இடையிலான நட்புறவை மேம்படுத்துவது அவசியம் ஆகும்.

பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி , மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறைகளிலும் ரஷ்யா - பிரான்ஸ் கூட்டுறவு முக்கியமாகும். மேலும் பொருளாதாரத்தை மேம்படுத்தி பயங்கரவாதத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று ஹியூபெர்ட் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து