மருத்துவமனையில் வைகோ அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Vaiko 2019 02 26

மதுரை, : ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ திடீர் உடல்நலக் குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைகோ, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் தேசிய அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தீவிர அரசியல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஓய்வின்றி நிறைய இடங்களுக்கு அவர் செல்வதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வைகோவுக்கு உடல்நல சோர்வு ஏற்பட்டதை அடுத்து நேற்று மதுரை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

உடலில் ஏற்பட்ள்ள சிறு சிறு பிரச்னைகளை சரி செய்வதற்கும், ஆலோசனைகளை பெறுவதற்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி வைகோ ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், 20,21,22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து