முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் தோல்வி எதிரொலி: மீண்டும் தலைமை ஏற்க முலாயம் முயற்சி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து மக்களவை தேர்தலிலும் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, அக்கட்சிக்கு மீண்டும் தலைமை ஏற்க முலாயம் சிங் யாதவ் முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமாஜ்வாடி கட்சியின் தலைவராக முலாயம்சிங் யாதவ் இருந்தார். கடந்த 2017, ஜனவரி 1-ல் அவரது மகன் அகிலேஷ் யாதவ் அக்கட்சியின் தலைவரானார். இதையடுத்து, கட்சியின் முழு அதிகாரத்தையும் தனது கட்டுப் பாட்டுக்குள் அகிலேஷ் கொண்டு வந்தார். இதனால், அக்கட்சியின் நிறுவனரான முலாயம்சிங்குக்கு கட்சியில் செல்வாக்கு இல்லாத நிலை ஏற்பட்டது.

மேலும் தனது சகோதரர் ஷிவ்பால் சிங் யாதவ் சமாஜ்வாடியில் இருந்து வெளியேறி புதுக் கட்சி தொடங்கியதையும் முலாயமால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 2017-ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்ட அகிலே ஷுக்கு படுதோல்வி ஏற்பட் டது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில்  மாயாவதியின் பகுஜன் சமாஜுடன் கூட்டணி வைத்தார் அகிலேஷ். இதிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.  அத்துடன், சமாஜ்வாடி கட்சியின் 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளிட்ட பலரும் பா.ஜ.க.வில் இணைந்து விட்டனர். எனவே, அகிலேஷ் மீது நம்பிக்கை இழந்த முலாயம் சிங், சமாஜ்வாடி கட்சியை வலுப்படுத்த மீண்டும் அக்கட்சியின் தலைவராக விரும்புகிறார்.
இந்நிலையில், மாநிலங்களவையின் சமாஜ்வாடி தலைவரும் தனது ஒன்றுவிட்ட சகோதரருமான ராம் கோபால் யாதவுடன் முலாயம் சிங் ஆலோசனை நடத்தினார். அவரிடம் தான் மீண்டும் கட்சித் தலைவராக விரும்புவதாகவும், இதற்காக தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தைக் கூட்டுமாறும் முலாயம் கூறியுள்ளார். இதனிடையே, முலாயமின் விருப்பத்தை முன்கூட்டியே புரிந்து கொண்ட அகிலேஷ், தனது தந்தையை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.

இதுகுறித்து சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் கூறுகையில், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் பா.ஜ.க.வில் இணைந்தது எங்கள் கட்சிக்கு பேரிழப்பு என முலாயம் அஞ்சுகிறார். ஏனெனில், நீரஜ் உ.பி.யின் கிழக்கு பகுதியில் முக்கிய தலைவர். இவரைப்போல, மற்ற நிர்வாகிகளும் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு தாவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த முலாயம் சிங்கால் மட்டுமே முடியும் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து