முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கத்தின் விலை அதிகரித்தாலும் இறக்குமதி வரியை குறைக்க முடியாது - அகமதாபாத்தில் நிர்மலா சீதாராமன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : தங்கம் விலை கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரு சவரன் 28,856-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை நாளாகும். அதனால் சனிக்கிழமை விலையிலேயே நேற்று தங்கம் விற்பனையானது. இன்று திங்கட்கிழமை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது என்பது தெரியவரும்.

இந்நிலையில், அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டாலும், அவற்றுக்கான இறக்குமதி வரியை குறைக்க முடியாது. நகை செய்தல் உள்ளிட்ட மதிப்பு கூட்டு நடவடிக்கைகளுக்காக, தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களை போலவே, தங்கமும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. மேலும் இறக்குமதி தங்கத்திற்காக, செலவிடப்படும் அன்னிய செலாவணியின் அளவை தள்ளுபடி செய்ய முடியுமா?. இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து