2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      இந்தியா
pm modi 2019 05 01

புது டெல்லி : 2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.

இந்திய பிரதமராக 2-வது முறை பதவி ஏற்ற பின்னர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் முதல் முறையாக 2 நாள் பயணமாக பூடான் சென்றார். அதனை தொடர்ந்து பூடான் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ரூபே கார்டு அறிமுகம், இந்தியா - பூடான் இடையேயான 50 ஆண்டு நீர் மின்சக்தி ஒத்துழைப்பு நினைவு தபால்தலை வெளியீடு மற்றும் உயர்மட்ட கூட்டங்கள் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து இருநாட்டு பிரதமர்கள் இடையிலான பேச்சுவார்த்தையின் போது 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 2-வது நாளில் அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்நிலையில், 2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து